Saturday, February 28, 2009

காதல் வள்ளலார்

பசித்திரு,
தனித்திரு,
விழித்திரு -
காதலில் விழுந்தாரோ
வள்ளலாரும் கூட?

Wednesday, February 25, 2009

வானம் பார்த்த பூமி

வறண்ட நிலத்தில்
மழைத் துளிகள்.
இருண்ட மேகங்கள்
கலையாதிருக்க,
வீசும் காற்றிடம்
நிலத்தின் பிரார்த்தனை.